அமெரிக்காவினால் இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், பாலஸ்தீனத்தின் தலைநகராக அது இருக்க வேண்டும் என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமது தூதரகத்தை டெல் அவிவ்வில் இருந்து மாற்றப்போவதில்லை என்றும் இலங்கை அறிவித்துள்ளது. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அண்மையில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தமது தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் இலங்கை தமது நிலைப்பாட்டில் மாற்றத்தை செய்யவில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் தலைநகராக ஜெருசலேம் இருக்க வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்து.