அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான பணிகளை தவிர்க்கவும், வேறு பயணங்களை ஒத்தி வைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குங்கள் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிற நிலையில், குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை.
இந்த நிலையில், தன் நாட்டு குடிமக்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான பயணங்களை தவிர்த்து பிற பயணங்களை ஒத்திப்போட வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.