இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்தது.ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும்.
இந்த முடிவு மத்திய கிழக்கு பிரதேசத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருத முடியாது, எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பாலத்தீனம், சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ளது.பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே அவர் கூறும் போது “சம்பந்தப்பட்ட பாதுகாப்பு சபை தீர்மானங்களுக்கு இணங்க, கிழக்கு ஜெருசலேம் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களின் பகுதியாக நாம் கருதுகிறோம்,. என கூறி உள்ளார்.
இந்த நிலையில் ஐநாசபையின் பாதுகாப்பு சபை நேற்று கூடியது இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்ததால், சிறப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்
தனிமைப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா உணர்ந்தது.அந்த கூட்டத்தில் ஜெருசலேம் விவகாரம் குறித்து இஸ்ரேலியர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். இறுதி நிலை உடன்படிக்கை பாலஸ்தீனியர்கள் முன்னணி இருக்க வேண்டும். என 5 ஐரோக்கிய நாடுகள் தெரிவித்தன.
ஐரோப்பிய யூனியனில் ஒரு தெளிவான மற்றும் ஒன்றுபட்ட நிலை உள்ளது. இது ஒன்றே இஸ்ரேலுக்கு இடையிலான முரண்பாட்டிற்கு ஒரே உண்மையான தீர்வு என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் பாலஸ்தீனம் இரு நாடுகளின் அடிப்படையிலானது. பாதுகாப்புக் குழு கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட ஒரே அறிக்கை ஐரோப்பிய அறிக்கை, கூட்டம் கூட்டு அறிக்கையோ அல்லது தீர்மானமோ இல்லாமல் முடிந்தது.