உலகில் அதிகாரமிக்க மாளிகை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையாகும். பாரம்பரியமிக்க கட்டிடமான இங்கு, எலி, கரப்பான் தொல்லை அதிகரித்திருக்கும் விஷயம் சர்ச்சையாகி உள்ளது. சமீபத்தில், கட்டிட பராமரிப்பு பணிக்களுக்கு ஒப்பந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை நிர்வாகம் வெளியிட்டது. அதில், எலி, கரப்பான் பூச்சிகளை ஒழித்து கட்ட வேண்டும், உடைந்திருக்கும் கழிவறைகளையும், கதவுகளையும் சரி செய்ய வேண்டும் என பல்வேறு பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வெள்ளை மாளிகை குப்பை குடவுனாகி விட்டதாக அமெரிக்க மீடியாக்கள் கேலி செய்கின்றன.