சீன எல்லையில் ட்ரோன் நொறுங்கி விழுந்தது தொடர்பாக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என சீனா கூறியுள்ளது.
விளக்கம்
இந்தியாவுக்கு சொந்தமான ட்ரோன், தங்கள் நாட்டு வான்வெளியில் நுழைந்து விபத்துக்குள்ளானதாக சீன ராணுவம் குற்றம்சாட்டியது.இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இரு நாட்டு எல்லைப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி ட்ரோன் கட்டுப்பாட்டைஇ ழந்து மாயமானது. சீனாவின் எல்லைக்கு சென்றிருக்க கூடும் என்ற அடிப்படையில் சீன ராணுவத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்திருந்தது.
பதில் நிச்சயம்
இந்நிலையில், சீன அரசுக்கு சொந்தமான பத்திரிகையில், ட்ரோன் ஊடுருவலில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தலைப்பில் வெளியான தலையங்கம்: ட்ரோன் ஊடுருவல் நடந்த இடம் என்பது இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே பிரச்னை ஏற்பட்ட இடம். இது நடந்த நேரமும் இடமும் பிரச்னைக்குரியது. ஒரு நாட்டை கோபபடுத்தும் செயலை இரு நாடுகளும் தவிர்க்க வேண்டும். ஆனால், இந்தியா கவனமாக நடந்து கொள்ளவில்லை.இது தொழில்நுட்ப பிரச்னையாக இருக்கட்டும். தவறான இடத்தில், தவறான நேரத்தில் தொழில்நுட்ப பிரச்னை ஏன் ஏற்பட வேண்டும். சீனாவுக்கு சொந்தமான ட்ரோன், இந்திய எல்லைக்குள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நுழைந்தால், இது சாதாரண பிரச்னை என நாங்கள் சொன்னால் அதனை இந்தியா ஏற்று கொள்ளுமா? இதற்கு நிச்சயம் பதில் விளைவு இருக்கும். ட்ரோனை இழந்ததை விட பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.