Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவுவதாக நோர்வே, மலேசியா உறுதியளிப்பு

December 4, 2017
in News, Politics
0
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவுவதாக நோர்வே, மலேசியா உறுதியளிப்பு

இலங்கை முஸ்லிம்கள் ஆயுதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விபரங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவவை வந்தடைவதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கான ஆசிய பசுபிக் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் குனகேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, 1 ஆம் திகதி, ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற, சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினரில் ஒரு பகுதியினரான முஸ்லிம்களை சந்திப்பதில் நாம் மகிழ்வடைகிறோம். இலங்கை முஸ்லிம்கள் கவனத்தை நாம் தற்போது படிப்படியாக குவித்து வருகிறோம். எதிர்வரும் மார்சில் ஜெனீவாவில் இலங்கை முஸ்லிம்கள் குறித்து முக்கிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதுபற்றிய விவாதம் நடைபெறவுள்ளது. இதில் முஸ்லிம் விவகாரத்தையும் உள்ளீர்த்து அதுபற்றி ஆராய்வோம்.

இலங்கையில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக அறிகிறோம். இலங்கை முஸ்லிம்களிடம் போதிய வாக்குப் பலம் இருந்தும், அவர்கள் தமது வாக்குப் பலத்தை உரியவகையில் பயன்படுத்துவதில்லை என உணர்கிறோம்.

இலங்கை முஸ்லிம்கள் ஆயுத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என்பதை நாம் அறிவோம். எனினும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விபரங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வந்தடைவதில்லை. இந்நிலை மாற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இச்சந்திப்பில் கலந்துகொண்ட சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள் பொதுபல சேனாவுக்கு மியன்மாரின் பௌத்த தீவிரவாத அமைப்பான 996 அமைப்புடன் ஏற்பட்டுள்ள நெருங்கிய உறவை சுட்டிக்காட்டியுள்ளதுடன், இலங்கை முஸ்லிம்கள் விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், மியன்மாரை ஒத்த நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கும் ஏற்படலாமென சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் பிரச்சாரங்களில் சிங்களவர்கள் மாத்திரமின்றி, தமிழர்களும் ஈடுபடுவதாகவும் எனினும் பொலிஸார் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதில்லை எனவும், சட்டத்தை சரிசர பயன்படுத்தாது பொலிஸார் பாரபட்சம் காண்பிப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கான ஆசிய பசுபிக் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் குனகே உரியவகையில் குறிப்பெடுத்துக் கொண்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சிறுபான்மை விவகார, சிறப்பு அறிக்கையாளர்

யாழ்ப்பாண சர்வதேச முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சிறுபான்மை விவகார சிறப்பு அறிக்கையாளராக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் பெர்னான்ட் டீ. வேனஸினையும் சந்தித்தனர். இதன்போது அவர் தெரிவித்த விடயங்களாவன,

இலங்கையில் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய விவகாரம் பேசப்படுகிறது. இதில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் நிகழும் என்று நீங்கள் நம்புவீர்களாயின் இதுபற்றிய உரிய ஆதாரங்களிளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடடம் சமர்ப்பியுங்கள்.

மேலும் முஸ்லிம்களின் காணிகளை பெரும்பான்மை சிங்கள சமூகமோ அல்லது வடக்கிழக்கில் பெரும்பான்மையாக விளங்கும் தமிழர்களோ ஆக்கிரமித்திருந்தால் அதுபற்றியும் இலங்கை முஸ்லிம்கள் முறையிடலாம். இதுபற்றி கவனம் செலுத்த ஐ.நா. மனித உரிமைகள் சிறுபான்மை விவகார சிறப்பு அறிக்கையாளர் அலுவலகம் தயாராக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே, மலேசியத் தூதுவர்களுடன் சந்திப்பு

ஜெனீவாவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ், ஜெனீவாவுக்கான மலேசியத் தூதுவர் செய்யது எட்வான் ஆகியோரையும் ஜெனீவாவில் வைத்து யாழ்ப்பாண முஸ்லிம் சமூக சர்வதேசப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

இதன்போது யாழப்பாண முஸ்லிம்களின் வரலாறு, புலிகளினால் அந்த முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமை., தற்போது அவர்கள் எதிர்கொண்டுள்ள அவலமான வாழ்வு, மீள்குடியேற்றத்தில் பாரபட்சம், மத்திய அரசினதும், மாகாண அரசாங்கத்தினதும் புறக்கணிப்பு, யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள், அதற்கு குறித்த இரு நாடுகளும் உதவ வேண்டுமெனவும் இதன்போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது தம்மால் முடிந்த உதவிகளை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு செய்வதாக நோர்வே மற்றும் மலேசியத் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்

Previous Post

வீட்டை தோற்கடிக்க உதயசூரியனே வேண்டும்

Next Post

கோத்தபய ஜனாதிபதியாவார் என்ற செய்திக்கு, கொழும்பு பல்கலைக்கழகம் மறுப்பு

Next Post

கோத்தபய ஜனாதிபதியாவார் என்ற செய்திக்கு, கொழும்பு பல்கலைக்கழகம் மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures