Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதிய இளவரசியைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகள்: இளவரசர் கொடுத்த டயானாவின் டைமண்ட்

December 3, 2017
in News, World
0
புதிய இளவரசியைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகள்: இளவரசர் கொடுத்த டயானாவின் டைமண்ட்

இங்கிலாந்தின் இரண்டாவது இளவரசர் ஹேரியின் திருமண அறிவிப்புதான் இப்போதைய டாக் ஆஃப் தி குளோபல் டவுன்.

ஹேரியும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலும் ஒன்றரை வருடங்களாகக் காதலித்து வந்தனர். தற்போது, திருமண அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா உள்பட பலரிடமிருந்து வாழ்த்து மழை. அதேநேரம், சர்ச்சைகளும் றெக்கை கட்டியுள்ளன. புதிய இளவரசியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

அமெரிக்க தந்தைக்கும் ஆப்பிரிக்க தாய்க்கும் பிறந்தவர் மேகன் மார்க்கல். ’சூட்ஸ்’ என்ற அமெரிக்கத் தொடர்மூலம் பிரபலம் ஆனவர். (இளவரசர் ஹேரி, அந்தத் தொடரை ஒருமுறைகூட பார்த்தது இல்லையாம்).

இளவரசரும் மேகனும் தூரத்துச் சொந்தமாம். (சர்ச்சிலுக்கும் ஷேக்ஸ்பியருக்கும்கூட) 15 தலைமுறைகளுக்கு முன்பு, மேகனின் தந்தை வம்சம், ராஜ குடும்பத்துக்குச் சொந்தக்காரர்களாம்.

இவர்கள் இருவரையும் 2016-ம் ஆண்டு ஜூலையில், அடையாளம் வெளியிடாத தோழிதான் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்போது, மிஷா நானூ என்கிற ஃபேஷன் டிசைனருடன் மேகன் அதிக நாள்களைச் செலவழித்துள்ளார். மிஷாவின் கணவருக்கு இளவரசர் நெருக்கம். எனவே, இருவரையும் அறிமுகப்படுத்தியது மிஷாவாக இருக்கலாம் என்பது பலரின் கணிப்பு. ஆனால், இதற்குப் பதிலளிக்க மிஷா மறுத்துவிட்டார்.

2016 ஜூலையிலிருந்து அமெரிக்காவுக்கும் லண்டனுக்குமாகப் பறந்து பறந்து காதலித்துள்ளார்கள். ‘திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று மண்டியிட்டு புரோபோஸ் செய்துள்ளார் இளவரசர் ஹாரி. கேள்வியை முடிக்கவிடாமலே ‘சரி’ என்று மேகன் சொல்லிருக்கிறார். ஹவ் ரொமான்டிக்!

மேகனுக்குக் கொடுத்த மோதிரத்தில் இருக்கும் கல், டயானாவின் நகைகளிலிருந்து எடுக்கப்பட்டது. அந்த மோதிரத்தை ஹேரியே வடிவமைத்துள்ளார். மறைந்த தன் அம்மா டயானாவின் ஆசிர்வாதம் இருவருக்கும் வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இது.

மேகன் மார்க்கல் கலப்பினத்தவர் என்பதால், பிரிட்டனைச் சேர்ந்த ஊடகங்கள் இனவாதக் கருத்துகளுடன் செய்தி வெளியிட்டன. மீடியாக்கள் வரம்பு மீறிச் செயல்படுவதாகவும், இதுபோன்ற ஊடக வன்முறையைப் பார்த்ததில்லை என்றும் இளவரசர் சொன்னதாக, அரச குடும்ப பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. மேகன் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்தும் இளவரசர் அச்சமடைந்துள்ளாராம்.

எலிசபெத் ராணி, இங்கிலாந்து அரசி மட்டுமல்ல; சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் தலைவர் என்ற பொறுப்பையும் வகிப்பவர். விவாகரத்து ஆனவர்களின் திருமணங்கள் ஊக்குவிக்கப்படமாட்டாது என்பதால், சொந்த மகன் சார்லஸின் இரண்டாவது திருமணத்துக்கே செல்லவில்லை. (மகன் திருமணம் செய்துகொண்டவரும் விவாகரத்தானவர்.) மேகன் மார்க்கல் விவாகரத்தானவர் என்பதால், இவர்களின் திருமணத்துக்கும் அரசி வருவது சந்தேகமே.

மேகன் மார்க்கலுக்குத் திருமணத்துக்கான விசா, மே மாதம் முடிவடைவதால், அதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும். முதல் இளவரசருக்கு ஏப்ரல் மாதம் குழந்தை பிறக்க இருப்பதால், மே மாதம் திருமணம் என முடிவுசெய்துள்ளார்கள். கூடிய விரைவில் திருமண தேதி வெளியாகும்.

செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் திருமணம் நடைபெற இருப்பதால், திருமணந்துக்கு முன்பே மேகனுக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட வேண்டும். மேகனும் கிறித்துவர் என்றாலும், வேறு உட்பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வழிமுறையைப் பின்பற்றப்பட வேண்டுமாம்.

முதல் இளவரசரின் திருமணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதுபோல இந்தத் திருமணமும் ஒளிபரப்பாகுமா என்று இன்னும் சொல்லப்படவில்லை. ‘அட்லிஸ்ட் ஃபேஸ்புக்ல லைவ் பண்ணுங்கப்பா’ என குஷியாகச் சொல்கிறார்கள் ரசிகர்கள்.

அவர் நடித்து வந்த சூட்ஸ்’ தொடரின் ஏழாவது சீசன் முடிவடைந்துள்ளதை அடுத்து, ‘திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன்’ என்று அறிவித்துள்ளார் மேகன்.

மேகன் அரச குடும்பத்தைச் சேராதவர் என்பதால், இளவரசி என்று அழைக்கப்படமாட்டார். டயானாவும், முதல் இளவரசரின் மனைவி கேத் மிடில்டனும்கூட இன்றுவரை இளவரசி என்று முறையாக அழைக்கப்படவில்லை. மதிப்புமிகு மனிதரின் மனைவி என்ற பொருளில்தான் அழைக்கப்பட்டார்கள்.

Previous Post

மூக்கை இழந்த சிறுமியை தத்தெடுத்து வளர்க்கும் அமெரிக்க பெண்மணி!

Next Post

கடும் பனிப்பொழிவு – பல்லாயிரக்கணக்கான வீடுகளிற்கு மின் தடை – போக்குவரத்தத் தடை!!

Next Post

கடும் பனிப்பொழிவு - பல்லாயிரக்கணக்கான வீடுகளிற்கு மின் தடை - போக்குவரத்தத் தடை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures