திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேசத்தில் ஆடைத் தொழிச்சாலையில் கடமையாற்றும் இளம் யுவதிகள் சென்ற கப் வாகனம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேரில் 11 இளம் யுவதிகள் காயமடைந்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் இன்று (27) திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா மணியரசன் குள வீதியில் அதிக மழை காரணமாக சறுக்கு ஏற்பட்டு இவ் விபத்து இடம் பெற்றதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த யுவதிகள் கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.