பரிசில்னுள்ள Seine-et-Marne இல் நேற்று ஒரு ஆச்சரியமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐந்தாவது தளத்தில் இருந்து விழுந்த மூன்று வயது சிறுமி ஒருத்தியை அக்கம்பக்கத்தினர் மொத்தை போட்டு காப்பாற்றியுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, Nemours பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமி ஒருத்தி, வீட்டின் பல்கனிவழியாக வெளியேற முயற்சிப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியை காப்பாற்றும் முகமாக மெத்தை சிலவற்றை தரையில் விரித்து வைத்துள்ளார்கள். தீயணைப்பு படையினர் வருவதற்கும் நிலமை கை மீறி சென்றுள்ளது. குறித்த 3 வயது சிறுமி அங்கிருந்து கீழே விழுந்துள்ளார். கீழே மெத்தை போட்டிருந்ததால் உயிர் சேதம் இன்றி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளாள். அதன் பின்னரே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், குறித்த சிறுமியை அவசரமாக பரிசில்னுள்ள Necker மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.