ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் 53 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏறாவூர் நகரில் உள்ள திருமண வீடொன்றில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட பலர் உடல் உபாதைக்குள்ளாகிய நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இன்று நண்பகல் வரை சுமார் 53 பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகவீனமடைந்தவர்களில் 25 சிறுவர்கள் 18 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
எனினும் இதுவரை அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம்.பழீல் தெரிவித்தார்.
ஏறாவூர் பள்ளியடி வீதியிலுள்ள திருமண வீடொன்றில் வழங்கப்பட்ட கோழி இறைச்சி பிரியாணியை உட்கொண்டதையடுத்து இந்த உபாதை ஏற்பட்டுள்ளது.
முதலில் வயிற்று வலியும் அதனைத் தொடர்ந்து வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டர்கள் தெரிவித்தனர்.
சமையல்காரரது வீட்டிலேயே திருமண பரிமாறலுக்கான உணவு சமைக்கப்பட்டதாக திருமண வீட்டார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.