பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பதில் செயலாளராக சட்டத்தரணியும் மத்திய சபை உறுப்பினருமான கபில கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்த பிரியஞ்ஜித் விதாரண இராஜினாமா செய்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.