Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

அணியின் மொத்த ஸ்கோர் 2; அதில் எக்ஸ்ட்ரா ஒரு ரன்!

November 24, 2017
in Sports
0
அணியின் மொத்த ஸ்கோர் 2; அதில் எக்ஸ்ட்ரா ஒரு ரன்!

19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் நாகலாந்து அணி இரண்டு ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அதில் ஒரு ரன் எக்ஸ்ட்ரா. எதிர் அணிக்கு இந்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது கேரளா மகளிர் அணி.

மாநிலங்களுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டி தற்போது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜே.கே.சி கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாகலாந்து- கேரளா அணிகள் மோதின. முதல் முறையாக இந்தப்போட்டியில் களமிறங்கிய நாகலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடக்க வீரர்களாக மென்ஹா-முஸ்கான் ஆகியோர் களம் கண்டனர். அணியின் ஸ்கோர் 2 ரன்னாக இருந்தபோது மென்ஹான் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இவர் 18 பந்தில் இந்த ரன்னை எடுத்தார்.

பின்னர் தீபிகா களமிறங்கினார். இவர் மென்ஹானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரு ரன்கூட எடுக்காமல் வெளியேறியது. 20 பந்தை சந்தித்த மென்ஹானும் 15 பந்தை சந்தித்த தீபிகாவும் டக் அவுட் ஆனார்கள். பின்னர் வந்தவர்கள் சீட் கட்டுப்போடு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இவர்களில் ஒருவர்கூட ரன் எடுக்கவில்லை. அனைவரும் டக்அவுட் ஆனார்கள். கேரளா அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17 ஓவரில் நாகலாந்து அணி அனைத்துவிக்கெட்டுகளை இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ஒரு ரன் எக்ஸ்ட்ராவில் வந்தது. கேரளா தரப்பில் மின்னுமணி 4 ஓவர்கள் வீசி மெய்டன் பெற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அலினா 3 ஓவர் வீசி 2 மெய்டன், 2 விக்கெட்டும், செளபரியா 6 ஓவர்கள் வீசி 6 மெய்டன், 2 விக்கெட்டும், சன்ரா சுரேன் 2 ஓவர்கள் வீசி 2 மெய்டன், 1 விக்கெட்டும், பீபை சீபஸ்டீன் 2 ஓவர்கள் வீசி 2 மெய்டன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேரளா அணியில் தொடக்க வீரர்களாக அன்சு ராஜூவும் ஜோசினாவும் களமிறங்கினர். நாகலாந்து பந்துவீச்சாளர் தீபிகா வீசிய முதல் பந்து நோபாலானாது. இரண்டாவது பந்து ஒய்டு வீசினார். கடைசிப் பந்தில் அன்சு ராஜூ பவுண்டரி விளாசினார். இதனால் 5 ரன்கள் பெற்ற கேரளா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Previous Post

இரண்டு சுழல்; ஒரு வேகம்! 208 ரன்னுக்கு சுருண்டது இலங்கை

Next Post

அறம் கதை திருட்டா?

Next Post
அறம் கதை திருட்டா?

அறம் கதை திருட்டா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures