கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கனேடிய பிரதமர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அலுவலகர் செரில் சாண்ட்பெர்க் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
செரில் சாண்ட்பெர்க் இவ்வாரம் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது கனடாவில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, “செரிலுடனான சந்திப்பு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டது. அதேவேளை எதிர்வரும் நாட்களில் அதிக வேலைவாய்ப்புக்களை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.