சீனாவின் டியான்ஜின் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நூலகமானது, 5 மாடிகளைக் கொண்டது.
மேற்கூரையிலும் புத்தக அலுமாரிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு, இங்கு 12 லட்சம் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
கீழ்த்தளம் முழுவதும் படிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதோடு நடுவில் இருக்கும் தளங்களில் அலுவலகங்களும் மேல் தளத்தில் கணினி அறைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
டச்சு கட்டிடக் கலைஞர்களால் 3 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.