Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிகளால் மதிப்பளிக்கப் பட்ட மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் மறைந்தார்!

November 15, 2017
in News
0

கோபு என்றும், எஸ்.எம்.ஜி. என்றும் நன்கு அறியப்பட்ட தனித்துவமான பத்திரிகையாளராக விளங்கிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் இன்று காலமானார்.

ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கோபாலரத்தினம் 1950களில் வீரகேசரியில் தனது பத்திரிகைத்துறைப் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர் 1956களில் ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். அப் பப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றினார்.

இவர் பத்திரிகை ஆசிரியராக செயற்பட்ட காலத்திலேயே ஈழநாடு பத்திரிகை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் பெற்றது. 1981இல் இலங்கை இராணுவத்தால் ஈழநாடு பத்திரிகை எரியூட்டப்பட்டபோது கோபாலரத்தினம் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.

அதன் பின்னர் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது இந்திய இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டார். அந்தச் சிறை அனுபவங்கள் குறித்து இவர் எழுதிய ஈழமண்ணில் ஓர் இந்திய சிறை என்ற நூலை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் வெளியிட்டிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், பின்னர் ஆலோசகராகவும் கடமையாற்றினார்.

2000ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பில் தங்கியிருந்த அவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகராக வழிநடத்தினார்.

இலங்கையின் பத்திரிகைத்துறையில் பல சிறந்த பத்திரிகையாளர்களையும் பத்திரிகை ஆசிரியர்களையும் இவர் உருவாக்கினார்.

தமிழ் தேசியம் சார்ந்து இவர் ஆற்றிய பணிகளுக்காக புலிகளின் தலைவர் பிபாகரன் 2006இல் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

கடந்த சில வருடங்களாக சுகவீனமான நிலையில் இருந்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம், இன்று காலமாகியதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Previous Post

கோழிக்குப் பாலியல் தொல்லை – 14 வயதுச் சிறுவன் கைது!!

Next Post

ரஜினி, கமலுக்கு சிறப்பு விருதுகள்

Next Post

ரஜினி, கமலுக்கு சிறப்பு விருதுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures