வட கொரியா உடனான அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் வார்த்தை போர் தொடர்கிறது. தன்னை முதியவர் எனக் கூறி வட கொரிய தலைவர் ஏன் அவமதிக்கிறார் என டிரம்ப் டிவிட்டரில் வியப்பாகக் கேட்டுள்ளார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை ‘குள்ளமான, குண்டான’ மனிதர் என தான் கூறியதில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் உன்னின் நண்பராக்க கடுமையாக முயற்சித்து வருவதாகவும், அது ஒருநாள் நடக்கும் எனவும் டிரம்ப் கூறுகிறார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப், 11 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இப்பயணத்தை ‘போர் தூண்டும்’ பயணம் என வட கொரியா விவரித்துள்ளது.
அமெரிக்காவைத் தாக்கும் அணு ஏவுகணையை உருவாக்கும் தனது லட்சியத்தை டிரம்பின் பயணம் எந்தவிதத்திலும் பாதிக்காது எனவும் வட கொரியா கூறுகிறது.
டிரம்பை முதியவர் என வட கொரியா மீண்டும் விவரித்துள்ளது. கிம் ஜாங் உன்னை ஏவுகணை மனிதர் என்றும், பைத்தியக்காரர் என்றும் டிரம்ப் முன்பு கேலி செய்திருந்தார்.