Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்கள், முஸ்லிம்களின் அடிமைகளாகிவிடுவர் – ஆனந்தி கதறுகிறார்

November 6, 2017
in News, Politics
0
தமிழர்கள், முஸ்லிம்களின் அடிமைகளாகிவிடுவர் – ஆனந்தி கதறுகிறார்

கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையானது கல்முனையில் வாழ்கின்ற தமிழர்கள் எப்போதும் முஸ்லிம்களின் ஆட்சி, அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கான கோரிக்கையாக காணப்படுகின்றது. எனவே கல்முனை மாநகர சபையினை பிரிக்கின்ற விடயத்தில் சாய்ந்தமருதை தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு எஞ்சிய பிரதேசங்களை ஒரு சபையாக அமைக்குமாறு வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் என்பதற்கு அமைவாக கல்முனை மாநகர சபையினை பிரிப்பது தொடர்பில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்முனை மாநகர சபையினை பிரிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். கல்முனை மாநகர சபையினை பிரிக்கின்ற விடயத்தில் கல்முனை தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கின்றேன்.

கல்முனை நகரமானது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமாக இருந்துவருகிறது. தமிழர்கள் செறிந்து வாழும் இப்பிரதேசம் சுதந்திரத்திற்கு பின்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கல்முனை தமிழர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு விமோசனத்தையும் விடிவையும் தேடிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. கல்முனை மாநகர சபையினை நான்காக பிரிக்குமாறு பிரதான முஸ்லிம் கட்சிகள் கோரி நிற்கின்றன. இக்கோரிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்முனை வாழ் தமிழர்களை அடக்கி ஆள்வதற்கான கோரிக்கையாகவே இதனைப் பார்க்கின்றேன்.

கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட சாய்ந்தமருதை தனியாக பிரித்து தனி பிரதேச சபையினை வழங்குமாறு கோருகின்றனர். அவ்வாறு பிரிந்து செல்வதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் 4ஆக பிரித்து தமிழர்களை ஒடுக்கி ஆள நினைப்பதை அனுமதிக்க முடியாது. சாய்ந்தமருது தனியாக பிரிந்து செல்கின்றபோது முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைந்து தமிழ் மக்களுக்கு பேரம்பேசும் வாய்ப்பு ஏற்படுவதோடு தமிழ் மக்களின் ஒருமித்த வாக்குப் பலத்தினால் கல்முனை மாநகர முதல்வராகவும் வரமுடியும். இதனால் கல்முனை தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியாகி விமோசனம் பெறுவார்கள் என்பதற்காகவே கல்முனையை 4ஆக பிரிக்க கோருகின்றனர்.

கல்முனை நகரில் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் இல்லை ஆனால் அவர்களின் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் உள்ளது என்பதற்காக தமிழர்களின் பிரதேசத்தை முஸ்லிம்களின் பிரதேசமாக உரிமைகோர விளைகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அமைச்சர்களான ஹக்கீம்இ றிசாத் போன்றவர்களின் கல்முனையை நான்காக பிரிக்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டினை வன்மையாக கண்டிப்பதோடு சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமானால் சாய்ந்தமருதை தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு எஞ்சிய பிரதேசங்களை ஒரு சபையாக அமையுங்கள். அதற்கு மேலதிகமாக பிரிக்க முற்படுவதானால் கல்முனை தமிழ் பிரதேசங்களை ஒன்றிணைத்து நிலத்தொடர்பற்ற ரீதியில் ஒரு நகர சபை உருவாக்கப்பட வேண்டும் இதுவே எமது நிலைப்பாடாகும்.

எனவே சமகாலத்தில் இச்சபைகளை குறிப்பாக தமிழர்களுக்கு என்று ஒரு சபையையும் சாய்ந்தமருது மக்களுக்கு என்று ஒரு சபையையும் உருவாக்கி தரவேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசுக்கு இருக்கின்றது. ஆகவே உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா இவ்விடயத்தில் அக்கறைகொண்டு கல்முனையில் வாழையடி வாழையாக வாழ்கின்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உடனடியாக செயற்பட்டு ஒரு நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு வேண்டிகொள்வதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

Previous Post

பெற்றோலை பகிர்ந்தளிக்க முடியாத அரசாங்கம், எப்படி அதிகாரத்தை பரவலாக்கும்..?

Next Post

2 தரப்பாக பிரிந்திருப்பதை, இந்தியாவின் றோ செய்கிறது – ஊவா முதலமைச்சர் குற்றச்சாட்டு

Next Post
2 தரப்பாக பிரிந்திருப்பதை, இந்தியாவின் றோ செய்கிறது – ஊவா முதலமைச்சர் குற்றச்சாட்டு

2 தரப்பாக பிரிந்திருப்பதை, இந்தியாவின் றோ செய்கிறது - ஊவா முதலமைச்சர் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures