தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சி நேற்று(30) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள தனியார்விடுதியில் நேற்று இக்கட்சி ஆரம்பமானது.
ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற கட்சிக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக அக்கட்சியிலிருந்து பிரிந்த சிலரால் தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.










