எதிர் கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
உத்தேச அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் தமக்கு உரையாற்றுவதற்கு, சம்பந்தன் இடம்தர மறுத்துள்ளார். இதன் மூலம் தமது பாராளுமன்ற சிறப்புரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.