”வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்,” என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மாட்டீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் கூறுகையில், ”தவறு செய்யாதீர்கள்; அமெரிக்கா மீதும் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் முறியடிக்கப்படும். அணு ஆயுதங்களை வடகொரியா பயன்படுத்தினால் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மூலம் அது முறியடிக்கப்படும்” என்றார்.
வடகொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் ஆறாவது சோதனையை நடத்தியது. அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கும் வகையில் ஏவுகணை சோதனைகளைகளும் நடத்தப்பட்டது. கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.