Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அநீதி, பிரதேச செயலகம் முன் போராட்டம்

October 26, 2017
in News
0
யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அநீதி, பிரதேச செயலகம் முன் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள் அரசினால் வழங்கப்படும் வீடமைப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டம் ஒன்றினை யாழ் மாவட்ட செயலக வாயிலில் நடாத்தினர்.

யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இன்று(26) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணிவரை இவ்வடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு பல்வேறு காரணங்களை காட்டி இறுக்கமான நிபந்தனைகளை அரச இயந்திரங்கள் மேற்கொள்வதாக தெரிவித்தே இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அதாவது மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடுகள் முஸ்லிம் மக்களுக்காக 2016 டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் இன்றுவரை அதில் ஒரு வீட்டையாவது குறித்த மக்களுக்கு வழங்கவில்லை எனவும் 2017ம் வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்ற நிலையில் 20க்கும் குறைவானவர்களுக்கே வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே தான் இந்த அநீதிக்கு எதிராக நாம் குரல்கொடுப்பதாகவும் எமது தாய் மண்ணிலிருந்து வெளியேற்றும் அராஜகத்தை சில அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

எனவே தான் எமது கோரிக்கை மக்களுக்காக வழங்கப்பட்ட 200 வீடுகளும் முழுமையாக வழங்கப்படல் வேண்டும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சமாதானமான முறையில் உயர் அதிகாரிகளுடன் பேசினோம் ஆனால் எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே எமது நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கு இந்த அமைதியான அடையாள சத்தியாக்கிரகப் போராட்டத்தை மேற்கொண்டோம் என கூறினர்.

Previous Post

லொறி – யானை மோதல் – 5 பேர் காயம்.

Next Post

மியன்மார் – பங்களாதேஷ் இடையே அதிபயங்கர உடன்பாடு, ஆபத்தில் ரோஹின்யர்கள்

Next Post

மியன்மார் - பங்களாதேஷ் இடையே அதிபயங்கர உடன்பாடு, ஆபத்தில் ரோஹின்யர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures