Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

தரங்கா சதம் வீண்: பாகிஸ்தான் வெற்றியும் பாபர் ஆஸம் சாதனைகளும்

October 17, 2017
in Sports
0
தரங்கா சதம் வீண்: பாகிஸ்தான் வெற்றியும் பாபர் ஆஸம் சாதனைகளும்

அபுதாபியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 219 ரன்களையே எடுத்தாலும், இலங்கையை 187 ரன்களுக்கு மட்டுப்படுத்தி 2-வது வெற்றியைப் பெற்றது, இலங்கை அணியில் தரங்கா (112) சதம் அடித்தும் இலங்கை அணி இலக்கை எட்ட முடியாமல் தோல்வி தழுவியது.

பாகிஸ்தான் அணியில் சதாப் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொகமது ஹபீஸ் 10 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஹசன் அலி 10 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் அனைவருமே அபாரமாக வீசினர், கமகே 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஸம் 133 பந்துகளைச் சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 101 ரன்களை எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஷதாப் கான் கடைசியில் 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்ததே இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். இரு அணிகளுமே தலா 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களை அடித்தன.

இலங்கை விரட்டியபோது உப்புல் தரங்கா 144 பந்துகளில் 112 ரன்களை 14 பவுண்டரிகளுடன் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், அவருக்கு ஸ்டாண்ட் கொடுக்க ஆளில்லை. இவருக்கு அடுத்தபடியாக 20 ரன்களைக் கடந்தது வாண்டர்சே மட்டுமே. டிக்வெல்லா, மெண்டிஸ், திரிமானே, சந்திமால் அனைவரும் சடுதியில் நடையைக் கட்டினர். 70/2 என்ற நிலையிலிருந்து அடுத்த 117 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இலங்கை தோற்றது.

இந்த ஆட்டத்தில் பாபர் ஆஸம் சில சாதனைகளைப் புரிந்துள்ளார்.

இந்தச் சதம் பாபர் ஆஸமின் 7-வது ஒருநாள் சதமாகும், இதனை அவர் 33 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார். பாகிஸ்தானில் 7 சதங்களை குறைந்த இன்னிங்ஸில் எடுத்தது ஜாகீர் அப்பாஸ், இவர் 42 இன்னிங்ஸ்களில் 7 ஒருநாள் சதங்களை எடுத்துள்ளார்.

இந்தச் சதம் பாபர் ஆஸம் தொடர்ச்சியாக யு.ஏ.இ.யில் எடுக்கும் 5-வது சதமாகும். யுஏஇ-யில் 5 சதங்களை எடுத்த முதல் வீரரானார் பாபர் ஆஸம். மே.இ.தீவுகளுக்கு எதிராக 3 போட்டிகளில் 3 சதங்கள், இந்த விதத்தில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இந்தியாவில் சாதனையை வைத்துள்ளார், 4 சதங்களை தொடர்ச்சியாக அடித்தார் டிவில்லியர்ஸ். சச்சின் டெண்டுல்கர், சயீத் அன்வர் ஆகியோர் 7 சதங்களை தொடர்ச்சியாக அடித்துள்ளனர்.

ஆஸம் தன் முதல் சதத்தை செப்.30, 2016-ல் அடித்தார். அதனுடன் 7 சதங்கள் ஆயிற்று. இவரை விட்டால் இதே காலக்கட்டத்தில் 7 சதங்கள் அடித்த ஒரே வீரர் டேவிட் வார்னர்.

பாபர் ஆஸமின் தனித்துவம் என்னவெனில் அரைசதங்களை சதங்களாக மாற்றும் திறமை. கடந்த ஆண்டு மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆரம்பித்த 18 இன்னிங்ஸ்களில் ஆஸம் ஒரேயொரு முறைதான் அரைசதம் அடித்து சதம் அடிக்காமல் அவுட் ஆகியுள்ளார். பெர்த்தில் ஆஸிக்கு எதிராக 84 ரன்களில் அவுட் ஆனார்.

பாபர் ஆஸம் தன் முதல் 15 இன்னிங்ஸ்களில் 37.57 என்ற சராசரிதான் வைத்திருந்தார். சதமெடுக்கும் பழக்கம் ஏற்பட்ட பிறகு 18 இன்னிங்ஸ்களில் ஆஸமின் சராசரி 75.53 என்பது குறிப்பிடத்தக்கது. இதே காலக்கட்டத்தில் இவருக்கு மேலே அதிக சராசரி (81.84) வைத்திருப்பவர் இந்திய கேப்டன் விராட் கோலி மட்டுமே.

ஆஸமின் 7 சதங்களும் அவர் 3-ம் நிலையில் களமிறங்கியதில் எடுக்கப்பட்டதே. இதே 3-ம் நிலையில் 17 இன்னிங்ஸ்களில் அவர் 1118 ரன்களை 79.85 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மொத்தமாக பாபர் ஆஸமின் ஒருநாள் போட்டி சராசரி 57.20 என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது`: பா.ஜ.க M.L.A

Next Post

2 ஆவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி!

Next Post
2 ஆவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி!

2 ஆவது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

June 5, 2026
ஜூன் 25 ஆம் திகதி வெளியாகும் கே ஜே ஆரின் ‘அங்கீகாரம்’

ஜூன் 25 ஆம் திகதி வெளியாகும் கே ஜே ஆரின் ‘அங்கீகாரம்’

June 5, 2026
நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 4, 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

June 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures