Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பறக்கும் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்லும் துபாய் போலீஸ் துறை

October 16, 2017
in News, World
0
பறக்கும் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்லும் துபாய் போலீஸ் துறை

லம்போர்கினி பெட்ரோல் கார், ரோபோட், ஆண்ட்ராய்டு ஆஃபீசர்களை தொடர்ந்து பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துபாய் போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.

உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாக துபாய் பார்க்கப்படுகிறது.

பல்வேறு உலக நாடுகளில் வானத்தில் பறக்கும் சிறிய ரக வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படாத நிலையில், துபாய் போலீஸ் துறை பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துவங்கியுள்ளது.

ஏற்கனவே லம்போர்கினி பெட்ரோல் கார், தானியங்கி ரோபோட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆஃபீசர் போன்ற தொழில்நுட்பங்களை தொடர்ந்து வானத்தில் பறக்கும் மோட்டார்சைக்கிள்களை துபாய் போலீஸ் பயன்படுத்த இருக்கிறது. இதன் மூலம் வானத்தில் இருந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஸ்கார்பியான் என அழைக்கப்படும் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள் ரஷ்யாவின் ஹோவர்சர்ஃப் (Hoversurf) எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது.

நான்கு இறக்கைகள் வாகனத்தின் இருக்கையை சுற்றி நான்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோவர்சர்ஃப் மோட்டார்சைக்கிள் தொடர்ச்சியாக 25 நிமிடங்களுக்கு வானத்தில் பறக்கும் என்றும் மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

ஒருவர் மட்டும் பயணம் செய்யக்கக்கூடிய ஸ்கார்பியான் தானியங்கி முறையில் இயங்கும் என்றும் அதிகபட்சம் 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் துபாய் போலீஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள்களையும் பயன்படுத்த துபாய் போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கென துபாய் போலீஸ் துறை மற்றும் ஹோவர்சர்ஃப் நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக ஹோவர்சர்ஃப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அலெக்சான்டர் அடமனோவ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துபாய் ஜிடெக்ஸ் தொழில்நுட்ப விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட பறக்கும் மோட்டார்சைக்கிள் ஸ்கார்பியானுடன், ஜப்பானை சேர்நத மிகாசா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்பைக் கான்செப்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட் மோட்டார்சைக்கிள் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் போலீஸ் பயன்படுத்தும் பறக்கும் மோட்டார்சைக்கிளினை வீடியோவில் காணலாம்.

Previous Post

இலங்கை வருகிறார் – தெஹ்மினா ஜானுவா

Next Post

‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!!- வி.சிவலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

லலித் – குகன் வழக்கில் கோட்டாபாயவுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

June 3, 2026
டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தார் ருமேஷ் தரங்க

டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தார் ருமேஷ் தரங்க

June 3, 2026
பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

June 2, 2026
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

June 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures