அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பொலனறுவையில் நடந்த நிகழ்வில் பங்கேற்றபோது, அவரது மடியில் அமர்ந்திருந்து விளையாடிய சிறுமியின் ஒளிப்படம் சமூக வலைத் தளத்தில் ‘வைரலாகியது’.
இந்த நிலையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது கீச்சகப் பக்கத்தின் முன்பக்கத் தில் தலைப்புப் படமாகத் தனது மடியில் சிறுமி அமர்ந்திருந்து விளையாடும் ஒளிப்படத்தை வைத்துள்ளார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம், பொலநறுவையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்கச் சென்றிருந்தார். அங்கு சிறுமி ஒருவர் அரச தலைவரைக் கண்டு ஓடிச் சென்றிருந்தார். தனது பாதுகாப்புப் பிரிவினருக்கு அந்தச் சிறுமியை தனக்கு அருகில் அனுமதிக்கப் பணித்திருந்தார். பின்னர் சிறுமியைத் தனது மடியில் தூக்கி அமர்த்தி கொஞ்சிக் குலாவினார்.
இது தொடர்பான ஒளிப்படம் சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வந்தது. இந்த வைரலான ஒளிப்படத்தை, அரச தலைவரின் புதல்வர் தஹாம் சிறிசேன வும் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். இது தொடர்பான பாடலையும் அவர் பதிவேற்றியிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தனது கீச்சகப் பக்கத்தில் சிறுமியுடன் விளையாடும் ஒளிப்படத்தைப் பதிவேற்றியுள்ளார்.