அநுராதபுரம் நகரில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஆறு பெண்களை கைதுசெய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நகரில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அருவருக்கத்தக்க விதத்தில் நடமாடித்திரியும் பெண்கள் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இவர்கள் ஆறு பேரும் 11 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அநுராதபுரம், மதுகம, தம்புள்ள, புத்தளம் மற்றும் நொச்சியாகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ளார்.