Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை

September 12, 2017
in World
0
சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு மருத்துவர் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துப்புரவு பணி செய்துவரும் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர், “9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதான என் மகள் கடந்த மாதம் காணாமல் போய்விட்டாள். அவரை நான் பல இடங்களில் தேடினேன். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு எனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த குமார் என்பவர் என் மகளை என்னிடம் ஒப்படைத்தார். அப்போது என்மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவளிடம் காரணம் விசாரித்தேன். அப்போது ஆரணியைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணான சித்ரா என்பவர் என் மகளிடம் ‘வேலை வாங்கித் தருவதாகக் கூறி அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளார். பின்பு ஆரணியில் உள்ள அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் என் மகளுக்கு மயக்க ஊசிபோட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

திருமங்கலம் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆகியோர் குற்றவாளிகளைக் கைது செய்ய சென்னை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைக் காக்கும் ‘பாக்சோ சட்டம்’ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சித்ரா, கோட்டீஸ்வரி, சுரேஷ் ஆகியோர் தலைமறைவாகினர். பின்னர் நேற்று காலையில் சித்ரா தனது மகன்களுடன் ஆரணி தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கையில் கொண்டுவந்த மண்ணெண்ணெயைத் தன்மீதும் தன் குழந்தைகளின் மீதும் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் சித்ரா. தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் சித்ராவைக் கைது செய்தனர். அதன்பின்னர் கோட்டீஸ்வரியையும் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சித்ரா, கோட்டீஸ்வரி, சுரேஷ், அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் அனைவரும் திருமங்கலம் காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மல்லிகா நம்மிடம் “இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துவிட்டோம். டாக்டருக்கும் இந்த வழக்குக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமி சொல்லிவிட்டார். கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறோம் தற்போது சிறுமியும், அவரது தாயும் அவர்களது நெருங்கிய உறவினரின் வீட்டில் எங்களது கண்காணிப்பில் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

இதுபோன்று குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமைகள் செய்யும் கயவர்களுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது!

Previous Post

100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்

Next Post

எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த 100, 5 ரூபாய் நாணயங்கள்!

Next Post
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த 100, 5 ரூபாய் நாணயங்கள்!

எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த 100, 5 ரூபாய் நாணயங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures