யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்தாலும், அதனால் ஏற்பட்ட வலி மட்டும் இன்னும் ஆரவில்லை.
தாயகத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினால் வலிந்து முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இறுதிக்கட்ட போரில் சரணடைந்த போராளிகள் மற்றும் விழுப்புண் அடைந்த போராளிகளை சிறிலங்கா இராணுவம் கொடூரமான கொலை செய்திருந்தது.
பெண் போராளிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இறந்த உடல்களையும் காட்டுமிரட்டித்தனமாக கையாண்டது சிறிலங்கா இராணுவம்.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றங்கள் ஆதாரங்களாக வெளியாகி ஒட்டுமொத்த தமிழினத்தை வேதனையில் ஆழ்த்தியது.
இந்த கொடூர நடவடிக்கை காரணமாக சர்வதேச மனிதநேய அமைப்புகள் சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன.
கடந்த வாரமும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதிக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இறுதிக்கட்ட போரின் போது கைது செய்யப்பட்ட பெண் மற்றும் ஆண் போராளிகளை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்யும் ஆதாரம் வெளியாகி உள்ளது.
இதில் உயிரூடன் பிடிபட்ட பெண் போராளிகளை நிர்வாணமாக்கி கொடூரமான கொலை செய்து தமது வெறியை தீர்த்துள்ளது சிறிலங்கா இராணுவம்.
தமிழினத்திற்கு எதிராக இடம்பெற்ற கொடூரங்களை மறந்து இன்று தாயக இளைஞர்கள், யுவதிகள் சமுதாய சீரழிவில் சிக்கி தவிக்கிறது.
தாயக பற்றற்று கேளிகை மற்றும் சினிமா பைத்தியங்களாக அலையும் தாயக இளைஞர் யுவதிகளை இந்த போர்க்குற்ற ஆதாரம் மாற்றமடையச் செய்யும் என்பது நம்பிக்கையாகும்.