நாட்டில் பல பிரதேசங்களில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந்தவகையில், களுத்துறை மாவட்டத்தின் பாளிந்தநுவர, அஹலவத்தை, வளலவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, அயகம, கிரில்ல மற்றும் இரத்தினபுரி பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தில் நாகொட மற்றும் அயலில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே இந்த மண் சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடை மழை தொடர்ந்து பெய்யுமிடத்து ஆபத்தான இடங்களில் வாழும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களைத்தேடி செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.