ஜகத் ஜெயசூரிய தொடர்பான விவகாரம் அரசாங்கம் சார்ந்த விடயமல்ல. எவருக்கு எதிராகவும் வெளிநாடுகளில் வழக்கு தொடர முடியும் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நேற்று (06) சபையில் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த கேள்விக்கு விரைவில் அ ரசாங்கம் பதிலளிக்கும். அமைச்சர் சரத் பொன்சேகாவின் கருத்து அவர் முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் கூறப்பட்டதாகும்.
அது அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல. எவருக்கு எதிராகவும் வெளிநாடுகளில் வழக்குத் தொடர முடியும். எனக்கு எதிராகவும் வழக்கு தொடர முடியும்.
சரத் பொன்சேகாவை கடந்த அரசாங்கம் சிறையிலடைத்தது. இது குறித்து வெட்கப்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தளபதிகளை சிறையிலடைக்காது. இந்த கேள்விக்கு இரு வாரங்களில் பதில் வழங்கப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார்.