வெலிக்கடை சிறைக் கைதிகள் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான நந்திமாலின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
நேற்று இரவு 11 மணியளவில் மொரட்டுவ -லுனாவ பிரதேசத்திலுள்ள அவரது வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் நந்திமால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சம்பவத்தை மறைப்பதற்காக கடந்த ஆட்சியாளர்களைப் போலவே இந்த ஆட்சியில் உள்ளவர்களும் செயற்பட்டு வருகின்றனர் என்று கபே அமைப்பின் பணிப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2012 நவம்பர் மாதம் 9ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.