தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நோயாளர் காவு வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 4 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அதிகவேக நெடுஞ்சாலையின் 85 – – 86 ஆம் மைல்கள் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நோயாளர் காவு வாகனம் ஒன்றே குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.