இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் முற்கொடுப்பனவு அட்டையொன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கண்டி நகரில் முன்னெடுக்கப்பட்ட பரீட்சார்த்த செயற்பாடுகள் வெற்றிகரமாக நடந்தேறியதென என பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இப் புதிய நடைமுறையின் மூலம் பணம் இல்லாத பட்சத்தில் குறித்த அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணிக்க முடியும் எனவும் பிரதியமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.