காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் திடீரென கொழும்பில் சந்திக்கவுள்ளார். வடக்கின் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலிருந்தும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்காக அவர்கள் இன்று கொழும்புக்குச் செல்லவுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.
அரச தலைவர் மைத்திரி இதன்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் உறவுகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திப்பதற்கு திடீரெனத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பில் நாளை நடைபெறவுள்ளது.
இந்தத் திடீர் சந்திப்புக்கான காரணம், சந்திப்புக்கு உறவினர்களைத் தேர்வு செய்த பிரதேச செயலகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.