வாளொன்றினைத் தன் வசம் வைத்திருந்தவர் நேற்று யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்படுகிறது.
28 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபரின் வீடு பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்போது தடை செய்யப்பட்ட வாளொன்றினையும், 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் வைத்திருந்தமைக்காக குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.