காலி நகர்ப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் காலி பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான நபரொருவர் எனத் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.