அம்பாந்தோட்டை – ஜூல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் ரத்நாயக்க மனம்பேரிகே சமில (வயது-34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொள்ளைகள் மற்றும் மாடுகளை திருடியவற்றுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.