Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதி

September 2, 2017
in News, Politics
0
படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதி

இந்து சமுத்திர பிராந்தியத்தில் முன் ஒருபோதும் இல்லாத வாய்ப்புக் கிடைத்தாலும், பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் உட்பட பல எண்ணற்ற பாதுகாப்புத் தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றது என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்தார்.எனவே இந்து சமுத்திரத்தி;ல் உள்ள பங்குதாரர்களின் கடலோரப் பாதுகாப்புப் படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதியளிக்கின்றது. இலங்கை கடற்படையினருக்கும் அமெரிக்க கடற்படையினருக்கும் இடையிலான உறவினை மேலும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திர மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வுகள் வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் , ஓர் இந்திய பசுபிக் பிராந்தியத்தின் சக்தியாக ஐக்கிய அமெரிக்கா எப்போதும் இருக்கும். ஏழு தசாப்தங்களிற்கும் மேலாக, கிழக்கு ஆபிரிக்காவின் கரையோரங்களிலிருந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை வரைக்குமான பரந்த வேறுபாடான தனித்தன்மைகளை அமெரிக்கா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இனிவரும் தசாப்தங்களிலும் இந்த கொள்கையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை.
இந்த ஆற்றல் கொண்ட பிராந்தியத்திற்கு அமெரிக்காவின் இணைப்பானது புதிய ஒன்றல்ல. இரு நூற்றாண்டுகளிற்கு முன்னர் புதிய இங்கிலாந்திலிருந்து கப்பல்கள் பொஸ்டனுக்கும் கல்கத்தாவிற்கு இடையில் இந்து சமுத்திரத்தின் வர்த்தகக் கடல் மார்க்கமாக வாசனைத்திரவியங்கள், தேயிலை மற்றும் பனிக்கட்டிகளையும் எடுத்துக் கொண்டு சென்றன.
இன்று இந்த நிலை வேகமாக முன்னேற்றமடைந்து இந்தப் பிராந்தியத்தில் எமது கூட்டாண்மை மற்றும் பகிரப்படும் மூலோபாய நலன்களை எப்போதும் நிரந்தரமாகக் கொண்டுள்ளன. இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு மற்றும் இராஜதந்திரச் செயலாண்மை குறித்து வெளிப்படுத்த உள்ளேன்.
முதலாவதாக பொருளாதார வளர்ச்சி, வெளிப்படையான அபிவிருத்தி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றினை மேம்படுத்தும் இந்து சமுத்திரத்திற்கான பொதுவான ஒரு தூரநோக்கு இருக்கின்றது. பிராந்தியத்தின் குடிமக்களுக்கும் பொறுப்புடைமைகளுக்கும் முன்னுரிமை அளித்தல், திறந்த சந்தை, நிலையான நன்மைகளை வழங்குதல் ஆகிய பிராந்தியரீதியான முன்னெடுப்புக்கள் யாவும் மிகவும் நிலையானதாக இருக்கும்.
இரண்டாவதாக இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், அதேபோல் மனிதாபிமான மற்றும் சுற்றுச் சூழல் பேரழிவுகளுக்குப் பதிலளிப்பதற்கும் நாடுகள் திறம்படச் செயலாற்றக்கூடிய வகையில் இருக்க வேண்டும். மனோபலத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பயிற்சியின் மூலம் இந்தச் சிக்கலான பிராந்தியத்தில் பாதுகாப்புச் சுமையைப் பகிர்ந்து கொள்ள முடியும். இறுதியாக வழிநடத்தும் சுதந்திரம் மற்றும் சிக்கல்களின் அமைதியான தீர்வு ஆகியவற்றினை உள்ளடக்கும் சர்வதேச நெறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு கொள்கையான பிராந்தியக் கட்டிடக்கலை அமைப்பினை ஆதரிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் சுதந்திரமாகப் பறந்து புறப்பட்டுச் சென்று சர்வதேசச் சட்டம் அனுமதிக்கும் இடங்களில் செயற்பட அவற்றிற்கு உரிமை உண்டு. இந்து சமுத்திரமானது உலகளாவிய வர்த்தகம் மற்றும் வாணிபம் ஆகியவற்றின் அடித்தளத்தில் உள்ளதனால் இதனுடைய கடல் மாக்கத்தின் வழியாகப் பயணிக்கும் வகையில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு உலக எண்ணெய் வர்த்தகமும் கிட்டத்தட்ட உலகின் அரைவாசியான 90,000 வணிகக் கப்பல்களும் பயணிக்கும் பாதையாக காணப்படுகின்றது.
இந்தப் பிராந்தியத்தில் பூமியில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் சிலவும், உலகின் மக்கள் சனத்தொகையில் கால்வாசிப் பகுதியும் உள்ளதுடன், அவர்களில் ஐநூறு மில்லியன் பேர் வரையில் இன்னும் நம்பகத்தன்மை வாய்ந்த அதிகாரத்தைப் பெறாத நிலையில் உள்ளனர்.
பொருளாதார ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் என்பது நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நாம் நம்புகின்றோம். உள்நாட்டுப் பிராந்தியங்களிற்கு இடையிலான வர்த்தகம் 2030 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 568 பில்லியன் டொலருக்கு நிகராக இருக்கும்.
ஏற்கனவே, அமெரிக்க நிறுவனங்கள் இப்பகுதி முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன . குடிபானப் போத்தல்களிலிருந்து விமானத்தின் உதிரிப் பாகங்கள் வரைக்குமான ஒவ்வொன்றினையும் இவை விநியோகம் செய்கின்றன. இந்தியாவில் மாத்திரம் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் ஐநூறு சதவீதத்தினால் அதிகரிக்கும் வகையில் பங்களிப்புச் செய்துள்ளது.
நேபாளத்தின் போக்குவரத்து மற்றும் எரிபொருள் வளத்துறைகளில் அறுநூறு மில்லியன் டொலரினை அமெரிக்கா முதலீடு செய்கின்றது. இது இந்து சமுத்திரத்தில் வர்த்தக உறவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பதற்கு இன்னுமொரு அறிகுறியாக விளங்குகின்றது.
வெளிப்படையான வெளிநாட்டு நேரடி முதலீட்டினை ஊக்குவித்தல், எரிபொருள் வளச்சக்தி உட்கட்டமைப்பினை உருவாக்குதல், வளங்களுடனான வளர்ந்து வரும் தொழில் முனைவோர்கள் தமது கருத்துக்களை மேம்படுத்துவதற்காக அவர்களை இணைத்தல் ஆகியவற்றுடன் சட்டபூர்வமான மற்றும் ஒழுங்கு முறையான ஆட்சியை மேம்படுத்துவதற்கு தெற்காசிய நாடுகளுடன் நாம் பங்குதாரர்களாக இருப்போம்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜூன் மாதத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இதைப் பற்றிச் சுட்டிக்காட்டியமையினால் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் வெளிப்படையான உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொறுப்புக் கடன் நிதி முறைகள் மூலம் பிராந்தியப் பொருளாதார இணைப்புக்களை வளர்ப்பதாக உறுதி அளித்துள்ளன.
சட்டவிரோதமான அறிவித்தல் விடுக்கப்படாத மற்றும் ஒழுங்குமுறையற்ற விதத்தில் மீன்பிடிக்கும் செயற்பாடுகளை உள்ளடக்கும் வகையில் உலகெங்கிலும் உள்ள கடல்சார் பொருளாதாரங்களை அச்சுறுத்தும் சிக்கல்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா பாதுகாப்பான ஓசோன் வலையமைப்பு மூலம் தனது பங்குதாரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், வன்செயல்களையும் மீறல்களையும் கண்டறிதல், சட்டவிரோமதான செயல்களில் ஈடுபடுபவர்களையும் சம்பந்தப்படுபவர்களையும் தண்டித்தல் ஆகிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை இந்த முயற்சி ஊக்குவிக்கின்றது. உலகெங்கிலும் இருந்து சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பாதுகாப்பான ஓசோன் வலையமைப்பில் இணைந்துள்ளனர்.
அத்துடன் ஒவ்வொரு நாட்டினையும் இந்தப் பாதுகாப்பான வலையமைப்பில் சேர்ந்து கொள்ளுமாறு இத்தருணத்தில் அழைப்பு விடுக்கின்றோம். தெற்காசியாவில், எமது பிராந்தியப் பங்குதாரர்கள் தமது பணிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தியா தனது கிழக்குக் கொள்கையின் மூலம் அதனுடைய அயல் நாடுகளுடன் வலுவான வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பு ரீதியான உறவுகளைக் கட்டி எழுப்புகின்றது.
இப்பிராந்தியத்தில் முன் ஒருபோதும் இல்லாத வாய்ப்புக் கிடைத்தாலும், பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் உட்பட பல எண்ணற்ற பாதுகாப்புத் தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றது. இந்தச் சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்கா பிராந்தியப் பங்குதாரர்களிற்கு இடையில் உளவுத்துறை சார்ந்த பகிர்வுகளை மேம்படுத்துதல் மற்றும் சமூகக் கொள்கைகள் போன்ற பகுதிகளில் மனோபலத்தினைக் கட்டியெழுப்புவதனை மேம்படுத்துதல் , போதைப் பொருள் பாவனை எதிர்ப்பு , விமானப் பாதுகாப்பு மற்றும் தடயவியல் பகுப்பாய்வு போன்ற பகுதிகளில் திறன்களையும் ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ளும் செயற்பாட்டினை மேம்படுத்த முயல்கின்றது.
கடல் மார்க்கம் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாட்டின் மீது ஈடுபாட்டினை விரிவாக்குவதும் ஒரு முக்கிய தேவையாக உள்ளது. அதிகரிப்பு முறையில் சவாலாக விளங்கும் கடல்சார் சூழலில் நம்பகரமான தகவல்களின் பகிர்வும் பாரிய ஒத்துழைப்பு ஒன்றிற்கான ஓர் அடித்தளமாகும்.
இந்து சமுத்திரத்தி;ல் உள்ள பங்குதாரர்களின் கடலோரப் பாதுகாப்புப் படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இன்று முதல் இரு வாரஙகளிற்குள் கடல்சார் மாசு தடுப்பு, சட்ட அமுலாக்கம், தேடல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் ஏனைய பல சிக்கல்களுக்கான ஒத்துழைப்பினை அதிகரிப்பதற்காக ஜப்பான் உலகக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் பொது மன்றக் கருத்தரங்கு ஒன்றினை நடத்துகின்றது.
அமெரிக்க – இந்திய – ஜப்பான் மலபார் கடற்படைப் பயிற்சிக்காக பத்தாயிரம் ஆளணி நபர்களை சம்பந்தப்படுத்தி பயிற்சி நெறி ஒன்றினை நடத்தியமை இன்று வரை எமது பாரிய மற்றும் சிக்கலான ஒரு செயற்பாடாக உள்ளது.
இலங்கைக் கடற்படையினருக்கும் அமெரிக்க கடற்படையினருக்கும் இடையிலான உறவினை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம். கடந்த வருடம் ஒக்ரோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது கடற்படைப் பயிற்சியை இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம்.
இந்து சமுத்திர பிராந்தியத்தின் அனைத்துக் கடற்படைகளும் இணைந்து பயிற்சியில் கலந்து கொள்ளவும் கூட்டுத் திறனை வளர்ப்பதற்காகவும் மற்றும் சர்வதேச ரீதியான தராதரங்களை நிலைநிறுத்துவதற்காகவும் கடல்சார் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் முடியும் என நம்புகின்றோம்.

தெற்காசியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையில் ஒரு பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இணைப்புகளை ஆதரித்தல். அனைத்து இந்து சமுத்திரத்தின் பங்குதாரர்களுக்கும் கடற்படைப் பயிற்சிநெறிகள் மூலம் பிராந்தியத்தின் மனிதாபிமான மற்றும் பேரழிவு நிவாரணத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும், இந்து சமுத்திரப் பொருளாதாரத்தைத் தாராளமயமாக்குதல், போட்டிச் சந்தையை அணுகக்கூடிய மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளை ஆர்வமாக ஏற்றுக் கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
தெற்காசியாவிலும் பரந்துபட்ட இந்திய பசுபிக் பிராந்தியத்திலும் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பகிரப்பட்டுள்ள நோக்கங்களைப் பின்பற்றுவதில் அமெரிக்க உறுதியாக உள்ளது ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தப் கூட்டு முயற்சியில் இங்கு இணைந்து கொள்வதற்காக நாம் ஒவ்வொரு நாட்டினையும் இத்தருணத்தில் அழைக்கின்றோம் என தெரிவித்தார்.

Previous Post

பிக்குகள் சம்பந்தப்படும் வழக்குகளை விசாரணை செய்யும் முறையை மாற்றுக- மல்வத்து பீடாதிபதி

Next Post

இந்தியாவின் கடல்சார் பார்வை பிராந்திய நலன்சார் கொள்கை!!

Next Post

இந்தியாவின் கடல்சார் பார்வை பிராந்திய நலன்சார் கொள்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures