வட மாகாணத்தில் ஒப்பந்த ஆசிரியர்களாக பணியாற்றும் 167 ஆசிரியர்களையும் நிரந்தரமாக்குவதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாணப் பாடசாலைகளில் இரண்டாம் மொழிக் கல்வியை புகட்டுவதற்கான ஆசிரியர் இன்மை நிலவிய காலத்தில் அப்போதைய ஆளுநரின் ஏற்பாட்டில் ஒப்பந்த ஆசிரியர்களாக குறித்த 167 பேரும் நியமிக்கப்பட்டனர் .
இவ்வாறு ஒப்பந்த ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட குறித்த 167 பேரில் 146 பேர் சிங்களப் பாடத்திற்காகவும் 21 பேர் தமிழ்ப் பாடத்திற்காகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். அதாவது தமிழ்ப் பாடசாலைகளில் சிங்கள பாடத்திற்காவும் சிங்களப் பாடசாலைகளில் தமிழ்ப் பாடத்திற்காகவுமே குறித்த ஆசிரியர்கள் ஒப்பந்த ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
குறித்த ஆசிரியர்களே அண்மையில் தமக்கான நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக்கோரி ஆளுநர் செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது