பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்குதவற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்து வரும் சில வாரங்களில் அவை நடைமுறைக்கு வரும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
குறித்த இந்த காப்புறுதி திட்டம் அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனூடாக பாடசாலை மாணவர்களுக்கு பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.