லன்ச் சீட் , சிலிசிலி பை மற்றும் உணவு பொதியிடல் பெட்டிகளின் உற்பத்தி (ரெஜிபோம்) , விநியோகம் மற்றும் பாவனைக்கான தடை இன்று(01) முதல் அமுலுக்கு வருகிறது.
குறித்த இந்த சட்டத்தை மீறுவோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் காரணமாக சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை தவிர்க்கும் நோக்கிலேயே குறித்த தடை அமுலுக்கு வருகின்றது.
நாளொன்றுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான லன்ச் சீட்டுக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.