தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 2 ஆம் திகதி பெருநாள் தினமும் நடைபெறுவதனால் அப்பணியில் ஈடுபடும் முஸ்லிம் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த தினம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி விட்டு கடமைக்கு வருமாறு முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டப்பட்டுள்ளனர். விருப்பமானவர்கள் தமது சொந்த விடுமுறையில் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டில் வசிக்கும் ஒரு முக்கிய இனமான முஸ்லிம்களின் பெருநாள் தினத்தில் அவர்கள் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட வழியின்றி இருப்பதாக அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் டெய்லி சிலோனிடம் தெரிவித்தனர்.
384 நிலையங்களில் 6,965 ஆசிரியர்கள் மூலம் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த 20 ஆம் திகதி 3,014 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சையில் 305,728 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.