Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்யும் ஊழியர்கள்!

August 31, 2017
in News, World
0
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்யும் ஊழியர்கள்!

நெல்லை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லாமல் சாக்கடையைச் சுத்தம் செய்துவருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் 100-க்கும் அதிகமான துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் மாநகராட்சிப் பகுதியில் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் மக்களின் வசிப்பிடப் பகுதிகளில் தேங்கும் குப்பைகளைச் சுத்தம் செய்வது, கழிவுநீர் ஓடை, சாக்கடை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி வழங்க வேண்டும். ஆனால், அந்த உபகரணங்கள் கொடுக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன், கழிவு நீர் செல்லும் சாக்கடை, பாதாளச் சாக்கடை போன்றவற்றில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஆட்களைக் கொண்டு வேலைசெய்ய அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், பல நேரங்களில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஆபத்தான பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சுகாதாரப் பணியாளர்கள் அந்தப் பணிகளைச் செய்கின்றனர்.
தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் கழிவுநீர் ஓடையை மாநகராட்சி ஊழியர்கள் வெறுங்கையுடன் சுத்தம்செய்த சம்பவத்தைப் பார்த்து அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கழிவு நீரை வெளியேற்றவும் அதில் தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றவும் எந்த உபகரணமும் இல்லாமல் கைகளால் அதனைச் செய்தனர்.
இதைக் கண்டித்து, நெல்லையில் உள்ள சாதி மதவாத ஆதிக்க எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக நெல்லை ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டது. அதில், ‘மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களை பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணிசெய்ய வலியுறுத்திய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஏற்கெனவே இதுபோன்று பணி செய்த காரணத்தால் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சிலர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளனர். அதனால் இதுபோன்று பணி செய்ய வற்புறுத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

ஒருபோதும் மன்னிப்பே கிடையாது – சசிகலா குடும்பம் பற்றி ஜெ

Next Post

கோர விபத்தில் சிக்குண்டு ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவயிடத்திலேயே பலி

Next Post
கோர விபத்தில் சிக்குண்டு ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவயிடத்திலேயே பலி

கோர விபத்தில் சிக்குண்டு ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவயிடத்திலேயே பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures