எதிர்வரும் செப்டம்பர் 15ம்திகதிக்கு முன்னதாக திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தினுள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
திருத்தியமைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதனைச் செயற்படுத்த சபாநாயகரின் ஒப்புதல் கையொப்பம் அத்தியாவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.