இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வடமத்திய மாகாண மருத்துவமனைகளில் இன்று(28) அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பணிப் புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அச் சங்கத்தின் பிரதிநிதி பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.