வரலாற்று சிறப்புப் பொருந்திய கதிர்காம திருத்தலத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் பூசகர்கள் இன்று(28) புத்தசாசன அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காம பிரதான தேவாலயத்தில் திறப்பை கையளிப்பதில் அண்மையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே குறித்த இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பினரின் கருத்துக்கள் பெறப்பட்டு நியாயமான தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும், குறித்த சம்பவம் தொடர்பாக துரிதமாக விசாரணை நடத்துமாறும் புத்தசாசன அமைச்சின் செயலாளர், பௌத்த விவகார ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.