பிரதான குழாய் வெடிப்பு காரணமாக பல இடங்களில் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிப்பிட்டிய, பெலென்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் நாளை(29) அதிகாலை 4 மணி வரை நீர்விநியோகம் தடைபட்டுள்ளது.