ஊடகத்துறை அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் இரண்டு பிரதான அதிகாரிகள் எதிர்வரும் வாரத்தில் மாற்றப்படவுள்ளதாக அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க கலங்சூரிய மற்றும் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் சமன் அத்தாவுத ஹெட்டி ஆகியோரே தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.