கல்லீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கள் குழந்தையின் சிகிச்சைக்காக சேகரிக்கப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை அதே நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் சத்திரசிகிச்சைக்காக உதவிய பெற்றோர் தொடர்பில் காலி பிரதேசத்தில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
காலி வக்வெல்ல பிரதேசத்தில் உயிரிழந்த சந்தநெத் என்ற 11 மாத குழந்தைக்காக அவர்களின் பெற்றோர் சேகரித்த 35 லட்சம் ரூபாய் பணத்தை அவ்வாறே கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளனர்.
காலி, வெக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த W.A.தினேஷா ரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு உதவியுள்ளார்.
“எனது மகன் கல்லீரல் நோயினால் பதிகப்பட்டுள்ளதனை வைத்தியர்களினால் நான் அறிந்து கொண்டேன். அதற்காக 85 லட்சம் ரூபாய் பணம் செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த கல்லீரல் பொருத்துவதற்கான சத்திரசிகிச்சை இந்தியாவிலேயே மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குடும்பத்தினர் சத்திரசிகிச்சைக்கு அவசியமான பணத்தை சேகரித்தனர்.
பின்னர் இந்த சம்பவம் ஊடகங்களில் பிரச்சாரமாகியதனை தொடர்ந்து பணம் சேகரிக்க முடிந்தது. பின்னர் சத்திரசிகிச்சைக்கு ஆயத்தமாகிய போது குழந்தை உயிரிழந்து விட்டது.
மகனுக்கு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளும் போது மேலும் அவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் தொடர்பில் தகவல் அறிந்து கொண்டேன்.
மகனின் சிகிச்சைக்கு 80 லட்சம் தேவைப்பட்ட போதிலும், 35 லட்சம் ரூபாய் பணமே சேகரிக்க முடிந்தது,அதனை நாங்கள் அந்த குழந்தைகளுக்கு வழங்கிவிட்டோம். இவ்வாறான நோயினால் இனி யாரும் பாதிக்க கூடாதென்பதே எனது எதிர்பார்ப்பு என உயிரிழந்த குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளனர்.
ராகம வைத்தியசாலையில் மகனுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் தொடர்பில் தகவல் அறிந்து கொண்டேன்.
மகனின் சிகிச்சைக்கு 80 இலட்சம் தேவைப்பட்ட போதிலும், 35 லட்சம் ரூபாய் பணமே சேகரிக்க முடிந்தது. அதனை நாங்கள் அந்த குழந்தைகளுக்கு வழங்கிவிட்டோம். இவ்வாறான நோயினால் இனி யாரும் பாதிக்க கூடாதென்பதே எனது எதிர்பார்ப்பு என உயிரிழந்த குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.