ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த 16 கிராம் 110 மில்லிகிராம் போதைப் பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மற்றையவர் திவுலப்பிட்டிய வலவ்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 2 கிராம் 500 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

