Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

ஒரு பக்கம் குளறுபடி; மறுபக்கம் வேதனை..!

August 25, 2017
in World
0
ஒரு பக்கம் குளறுபடி; மறுபக்கம் வேதனை..!

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் எது நடக்காது என்று தமிழக அரசு கூறியதோ, மாநில பாடத்திட்டத்தில் படித்து, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்கள் எது நடக்கக் கூடாது என்று எதிர்பார்த்தார்களோ அது நடந்துவிட்டது. தங்களது பதவிகளைத் தக்க வைப்பதற்காக டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்த எடப்பாடி பழனிசாமியாலோ பன்னீர்செல்வத்தாலோ மாநில சுயாட்சி உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

தாமதம் ஆனாலும் நல்ல முடிவு கிடைக்கும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அதில் மத்திய அரசு கல்லைத் தூக்கிப்போட்டது. இதோ விலக்கில்லை என்று அறிவித்து, அவசர அவசரமாக நீட் அடிப்படையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கிவிட்டது.

நேற்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்த நிலையில், இன்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இன்றைய கலந்தாய்வுக்காக 1,209 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். வரும் 30-ம் தேதி வரை முதல் கட்டக் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்காக மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 2,224 மாணவர்களும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த 1,310 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள இடங்களில் 37 சதவிகிதம் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இது நீட் அடிப்படையில் நடக்கும் முதல் கலந்தாய்வு. இது எப்படி நடக்கிறது என்பதை அறிய ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவக் கலந்தாய்வில் வழக்கமாக இருப்பதைவிட வட இந்தியர்களின் வாசனை சற்று அதிகமாகவே இருந்தது. கலந்தாய்வு நடக்கும் மெயின் ஹாலில்கூட தமிழைப் போலவே, இந்தி உரையாடல்களையும் நன்றாகக் கேட்க முடிந்தது.

கலந்தாய்வுக்காக வைக்கப்படும் பேனரில் முன்பு ஜெயலலிதா மட்டும் இருப்பார். தற்போது அந்த பேனரின் மற்றொரு பக்கத்தில் எடப்பாடியும் இடம் பிடித்துள்ளார். நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் 26 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முதல் 26 இடங்களிலுள்ள மாணவர்களும் கலந்தாய்வில் பங்கு பெறாமல் இருப்பது இதுவே முதல்முறை. நீட் அடிப்படையில் கலந்தாய்வு என்பதால் அவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும். அதனால் அவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை.

இதையடுத்து, தரவரிசைப் பட்டியலில் 27 வது இடம் பெற்றிருந்த, திருநெல்வேலியைச் சேர்ந்த சுலைமான் என்ற மாணவர் முதல் இடத்தைப் பிடித்தார். அவர் 10-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும், மேல்நிலைப் படிப்பை மாநிலப் பாடத்திட்டத்திலும் படித்துள்ளார். “நீட் மூலம் வாய்ப்பு விரிவடைந்துள்ளது. நல்ல மதிப்பெண் பெற்றால் எந்தக் கல்லூரியிலும் படிக்கலாம்” என்பது சுலைமானின் கருத்து.

ஆனால், நீட் அடிப்படையில் அவசர அவசரமாக நடத்தப்பட்டு வரும் கலந்தாய்வால் குளறுபடிகள்தான் அதிகரித்துள்ளன. மாணவர்களின் குறைகளைத் தீர்க்க சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் கூறினாலும், கலந்தாய்வு நடக்கும் ஹாலில் நடக்கும் வாக்குவாதங்கள் எண்ணிக்கைக்குக் கணக்கில்லை. கலந்தாய்வு தாமதமாக நடைபெறுவதால் மருத்துவம் அல்லாத பிற படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் அத்தாட்சி சான்றிதழைக் கொடுத்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் கலந்துகொண்டு இடம் கிடைத்த மாணவர்களுக்கு, மாநில அரசு நடத்தும் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பூரில் இருந்து வந்திருந்த ஒரு மாணவனின் தந்தை, “மருத்துவக் கலந்தாய்வு தாமதமாக நடைபெற்றதால், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்றோம். திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. தற்போது, மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ள அத்தாட்சி சான்றிதழ் கேட்டால் 3.75 லட்ச ரூபாய் கேட்கின்றனர் அந்தக் கல்லூரி நிர்வாகத்தினர்” என்றார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார், “என் தந்தை ஒரு ராணுவ வீரர். நான் டெல்லியில் நடந்த கலந்தாய்வில் கலந்துகொண்டேன். ராணுவ வீரர் பிரிவில் எனக்கு ஒரு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. 4 லட்ச ரூபாய் கட்டணம். எனக்கு இந்தியும் தெரியாது. அதனால், தற்போது தமிழகத்தில் நடக்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, அலாட்மன்ட் ஆர்டர் வாங்கிய பிறகு, அதைப் பிடுங்கிவிட்டார்கள். அகில இந்திய ஒதுக்கீட்டில் கிடைத்தவர்கள்தான், மாநிலக் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நான் டெல்லி மாநில கலந்தாய்வில்தான் கலந்துகொண்டேன்” என்றார்.

அஜித்தின் பிரச்னையைவிட இன்னும் கொடுமையானது மாணவி ஹரினியின் பிரச்னை. அந்த பிரச்னை குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் நீட் தேர்வில் 506 மார்க் எடுத்தேன். கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல்ல என் பேரே இல்லை. இங்க வந்து கேட்டா.. உங்க மார்க் 506 இல்லை. அதுல தப்பு இருக்கு. சி.பி.எஸ்.இ ஆபிஸ்ல போய்க் கேளுங்கண்ணு சொல்றாங்க. சரின்னு அண்ணாநகர்ல இருக்கிற சி.பி.எஸ்.இ ஆபிஸ்க்குப் போய் நேத்து கேட்டோம். அவங்க இதை டெல்லிலதான் போய் கேட்கணும்னு சொல்றாங்க. என்ன பண்றதுனே தெரியலை” என்றார் வேதனையுடன்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், “அத்தாட்சி சான்றிதழ் கொடுக்க முடியாதவர்கள், அதற்குப் பதிலாக்க கடிதம் ஒன்றைக் கொடுக்கலாம். போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அகில இந்திய மற்றும் பிற மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்களுக்குக் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. அது உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியுள்ள உத்தரவு. இது மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குமான பிரச்னை இல்லை. இந்த பிரச்னை 2005-ம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சில அவதிகள் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். குறைகளைச் சரி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்” என்றார்.

இப்படி ஹரிணிகளுடனும் அஜித்களுடனும் மற்றும் இன்னும் பல்வேறு குளறுபடிகளுடனும் நடைபெற்று வருகிறது கலந்தாய்வு.

Previous Post

ராம் ரஹிம் சொத்துக்களை கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்குக: பஞ்சாப் ஹைகோர்ட் அதிரடி

Next Post

தினகரன், சசிகலா பற்றி தவறான தகவல் பரப்புகிறார்கள்: செந்தில் பாலாஜி

Next Post
தினகரன், சசிகலா பற்றி தவறான தகவல் பரப்புகிறார்கள்: செந்தில் பாலாஜி

தினகரன், சசிகலா பற்றி தவறான தகவல் பரப்புகிறார்கள்: செந்தில் பாலாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures